தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மத்திய மற்றும் தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவிற்கு கட்டுப்படாமல் அவசியமின்றி சுற்றித்திரிபவர்களை கண்காணிக்க திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையினருக்கு “ஸ்மார்ட் காஃப் செயலி” வழங்கப்பட்டுள்ளது.
இச்செயலி மூலம் ஒருவர் அவசியமின்றி நடந்தோ, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் மூலமாகவோ சுற்றித் திரிந்தால் அவர்களின் விபரங்கள், வாகனத்தின் விபரங்கள் மற்றும் மேற்படி நபரின் புகைப்படம் ஆகியவை இச்செயலியில் பதிவு செய்யப்படும், மீண்டும் அதே நபர் அவசியமின்றி நாமக்கல் மாவட்டத்தில் வேறு ஒரு இடத்தில் சுற்றித் திரிந்தால் செயலியில் பதிவு செய்யும்போது அவர் ஏற்கனவே இச்செயலியில் பதிவு செய்யப்பட்டவர் என்ற விபரம் தெரிந்துவிடும். அதனை வைத்து சம்மந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு வழக்கு பதிவு செய்யப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் வெளிநாடு செல்லவோ, அரசு சம்பந்தப்பட்ட வேலைக்கு செல்லவோ, தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்ல தடையில்லா சான்று பெறவோ கடும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.
எனவே, கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனைவரும் தங்களது வீட்டிற்குள்ளேயே இருந்து முழு ஒத்துழைப்பினை வழங்கி, தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ளுமாறு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. M.R. சிபி சக்கரவர்த்தி IPS அவர்கள் கேட்டு கொண்டுள்ளார்.