திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வானமகா தீபத்திருவிழா வரும் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்று மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயரமலையில் மகாதீபம் ஏற்றப்படும். இன்றைய தினம் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். கடந்த முறை பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள் போன்றவைகளை மலையிலேயே போட்டு வந்ததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு இது போன்ற சுகாதார சீர்கேட்டை தடுக்கவும், தூய்மைப் படுத்தும் பணியை எளிமையாக்கவும் மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதில்,சணல் பை, துணிப் பை போன்றவற்றை கொண்டுவந்து பயன்படுத்தினால், அவர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் வழங்கப்படும் என்றும்,டிசம்பர் 9 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 10 ஆம் தேதி மாலை 6 மணி வரை இதற்கான கூப்பன்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இந்த கூப்பன்களை கோவிலுள்ள குபேர லிங்கம், அண்ணா நுழைவாயில் மற்றும் ஈவேரா சிலை முன்பு உள்ள மையங்களில் பக்தர்கள் போடலாம் என தெரிவித்துள்ள மாவட்ட நிர்வாகம்,கணினி முறையில் குலுக்கல் நடத்தப்பட்டு முதலில் தேர்ந்தெடுக்கப்படும்12 பேருக்குதலா 2 கிராம் தங்கமும், அடுத்ததாக தேர்ந்தெடுக்கப்படு 72 பேருக்கு தலா 10 கிராம் வெள்ளி நாணயங்களும்பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.