தட்கல் திட்டத்தில் விவசாய மின் இணைப்பைப் பெறுவது எப்படி?

தட்கல் திட்டத்தில் பங்கேற்க வரும் 21ம் தேதி முதல் 31.10.2020 வரை, விண்ணப்ப தொகையை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

விவசாய மின் இணைப்பைப் பெறும் வகையில் தட்கல் மின் இணைப்பு வழங்கல் திட்டத்தின் மூலம் விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலிலுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரா்கள் 5 குதிரைத் திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.2.50 லட்சமும், 7.5 குதிரைத் திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.2.75 லட்சமும், 10 குதிரைத் திறனுள்ள மின்மோட்டார்களுக்கு ரூ. 3 லட்சமும், 15 குதிரைத் திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ. 4 லட்சம் வீதம் ஒரு முறை கட்டணம் செலுத்துதல் மூலம் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும்.

தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி இத்திட்டத்தில் பங்கேற்க வரும் 21ம் தேதி முதல் 31.10.2020 வரை, விண்ணப்ப தொகையை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. சாதாரண வரிசை முன்னுரிமையில் 2003 முதல் 2004 வரை பதிவு செய்தோரில் 1000 விண்ணப்பங்களுக்கு இலவச விவசாய மின் இணைப்பு பெறலாம் என்று கூறியுள்ளது.