திருவண்ணாமலைஅண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயில் கருவறை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. திருண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீப திருவிழாவின் 3- ஆம் நாளான இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலின் கருவறை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டது.