புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாடுவோம்!!!

பொதுமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!!! நாளை போகிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் திருநாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி கொண்டாடுவர். பொங்கலுக்கு முந்தைய நாளான போகிப் பண்டிகை அன்று மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து புதிய பொருட்களுடன் பொங்கலை கொண்டாடுவர். பழைய பொருட்கள் என்ற பெயரில் மக்கள் அதிக கரியமில வாயுவை வெளிப்படுத்தும் பிளாஸ்டிக், ரப்பர், டயர் போன்ற பொருட்களை எரிக்க வேண்டாம் என்று தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.