கலசபாக்கம் அடுத்த காப்பலூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 100க்கும் அதிகமான மேற்பட்டோர் பணி நியமன ஆணை பெற்றனர்.
கலசபாக்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கலசபாக்கம் புதுப்பாளையம், ஜவ்வாது மலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு ,பி.ஏ, பிஎஸ்சி, பி,காம் என பல்வேறு பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு கூட்டுரோடு சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இம்முகாமில் சென்னை, திருப்பூர், ஈரோடு என பல பகுதிகளிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்துக்கு தகுதியானவர்களை தேர்வு செய்தனர்.
இதில் இளைஞர்கள் இளம்பெண்கள் பலர் கலந்து கொண்டனர் 100க்கும் மேற்பட்டோர் தேர்வு பணி நியமன ஆணைகளை கலசப்பாக்கம் MLA திரு.வி. பன்னீர்செல்வம் வழங்கினார். கலசப்பாக்கம்.காம் வளர்ச்சி ஆலோசகர் ஜெ சம்பத் தலைமை வகித்தார்.