திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழையால் 657 ஏரிகள் நிரம்பியது

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. கடந்த 4 நாட்களாக இடைவிடாமல் தொடர் மழையால் திருவண்ணாமலை மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், 657 ஏரிகள் முழுமையாக நிரம்பியிருக்கிறது. மேலும், மழை வெள்ளம் வடியாததால் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியிருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சுமார் 1.82 லட்சம் திறந்தவெளி பாசன கிணறுகளும் முழுமையாக நிரம்பியிருக்கிறது. அதேபோல், மொத்தமுள்ள 1,984 ஏரிகளில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 335 ஏரிகள், ஊரக வளர்ச்சித்துறைக்கு சொந்தமான 322 ஏரிகள் உள்பட மொத்தம் 657 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பியிருக்கிறது. எனவே, இந்த ஏரிகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.