திருவண்ணாமலை அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை - கலெக்டர் தகவல்!

திருவண்ணாமலை அரசு இசைப் பள்ளியில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

  • திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம் என ஏழு பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
  • இது 3 ஆண்டு கால சான்றிதழ் படிப்பாகும்.
  • அரசு பஸ்களில் பள்ளி வேலை நாட்களுக்கு இலவசப் பயணச் சலுகை உண்டு.
  • தினசரி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சி அளிக்கப்படும்.
  • வெளியூர் மாணவர்களுக்கு அரசினர் விடுதியில் தங்கி பயில வழிவகை செய்து கொடுக்கப்படும்.

 

வயது வரம்பு:12 முதல் 25 வரை (இருபாலரும்)

தகுதி: எழுத படிக்க தெரிந்தவர்கள் (குறைந்தபட்சம் ஏழாம் வகுப்பு தேர்ச்சி)

கல்வி உதவித்தொகை: மாதந்தோறும் ரூ. 400

அணுக வேண்டிய முகவரி:
மாவட்ட இசைப் பள்ளி தலைமை ஆசிரியர்,
செங்கம் சாலை சமுத்திரம் கிராமம்,
திருவண்ணாமலை.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் திரு.முருகேஷ் இ.ஆ.பா அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304