திருவண்ணாமலையில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால், காய்கறி மொத்த வியாபாரக் கடைகளுக்கு ஞாயிறு, திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.
அதன்படி, திருவண்ணாமலை நகரில் இயங்கி வரும் காய்கறி மொத்த வியாபாரக் கடைகளுக்கு ஞாயிறு, திங்கள் (ஜூன் 14, 15) விடுமுறை அளிக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா். இதேபோல, நகரில் உள்ள மின்சாதனக் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 21-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
கொரோனா தொற்று அதிகரிப்பதை தடுக்க வியாபாரிகளே முன்வந்துள்ளனா்.