திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா தொடங்க உள்ள நிலையில், திருக்கோவிலில் உள்ள ராஜ கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் உள்ளிட்ட 9 கோபுரங்களுக்கும் வண்ண விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், அமாவாசை தினமான நேற்று (23.11.2022) மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அண்ணாமலையார் திருக்கோவில் உள்ள 9 கோபுரங்களும் மின்னொளியில் ஜொலிக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.