குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜூலை 5 ஆம் தேதி முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தெரிவித்துள்ளது.
ஜூலை 20-ஆம் தேதி வேட்புமனு பரிசீலினை நடைபெறும்.
வேட்புமனுவை திரும்பப் பெற ஜூலை 22 கடைசி நாளாகும்.
ஆகஸ்ட் 6 ஆம் தேதி தேர்தல் முடிந்த பின்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.