CUET தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் மார்ச் 30 வரை நீட்டிப்பு..!

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்வில் பல கோளாறுகள் ஏற்பட்ட நிலையில் அவை அனைத்திற்கும் சரியான தீர்வு உடன் இந்த முறை நடத்துவதாக மூத்த அதிகாரி ஜெகதீஷ் குமார் கூறினார்.

இதுவரை சுமார் 11.5 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.