திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்க விண்ணப்பம் விநியோகம்!

இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்கு பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கு உரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோயில் அறங்காவலர் குழு நியமனத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் இதர விவரங்களை உதவி ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, 122/107, திருவூடல் தெரு, திருவண்ணாமலை, இணை ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, 4/15, காந்தி நகர், 7வது தெரு, திருவண்ணாமலை, ஆய்வர் /இந்து சமய அறநிலையத்துறை, 122/107, திருவூடல் தெரு, திருவண்ணாமலை, ஆய்வர்/இந்து சமய அறநிலையத்துறை, வேணுகோபாலசுவாமி கோயில், செங்கம் நகர்,ஆய்வர்/ இந்து சமய அறநிலையத்துறை, கோதண்டராமர் திருக்கோயில், ஆரணி நகர் மற்றும் வட்டம், ஆய்வர் /இந்து சமய அறநிலையத்துறை, ஆதிபராசக்தி கோயில், பைங்கிணறு, செய்யார் வட்டம், ஆய்வர் /இந்து சமய அறநிலையத்துறை, கோட்டை ஆஞ்சநேயர் கோயில், பழைய பேருந்து நிலையம் அருகில் வந்தவாசி. ஆய்வர்/இந்து சமய அறநிலையத்துறை அண்ணாநகர் அரசினர் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி எதிரில், கலசபாக்கம் நகர் ஆகிய முகவரியில் உள்ள அலுவலகத்தில் அலுவலக நாட்களில் பெற்றுக் கொள்ளலாம்.