• திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப திருவிழாவின் போது அன்னதானம் வழங்க அனுமதி பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் திரு. பா. முருகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
• திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 23-ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்குகிறது.
• நவ.27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றமும் டிச.6-ஆம் தேதி மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
• இதில் அன்னதானம் வழங்க உத்தேசிக்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் www.foscos.gov.in என்ற இணையத்தளத்தின் மூலமாகவும் மற்றும் திருவண்ணாமலை செங்கம் சாலை பழைய அரசு மருத்துவமனையில் இயங்கும் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் வளாகத்தில் விண்ணப்பிக்கலாம்.
• நவ.26-ம் (செவ்வாய்க்கிழமை) தேதிக்கு பின்னர் அன்னதான விண்ணப்பம் பெற மாட்டாது.
தொடர்புக்கு:
044-237416 | 8047749266 | 9865689838