அரசு கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேர இன்று (07.09.2022) முதல் www.tngasapg.in என்ற இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம். தரவரிசைப்பட்டியல் 20ம் தேதி வெளியிடப்பட்டு மாணவர் சேர்க்கை 21ம் தேதி தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.