கடலூரில் நாளை (04.01.2024) ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் தொடக்கம்!

கடலூரில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் நாளை 4 – ஆம் தேதி தொடங்கி 13 – ஆம் தேதி சனிக்கிழமை வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த தேர்வில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு உடல் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது. அதன்படி எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, கடலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கிறார்கள்.