அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ஆயிரம் கால் மண்டபம் பக்தர்களின் பார்வைக்காக திறப்பு!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தினை பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்காக இந்த ஆண்டு மின் விளக்குகள் வசதியுடன் கூடிய ஆயிரம் கால் மண்டபத்தின் தூண்கள் மற்றும் 108 சிவதாண்டவர் ஓவியங்கள் அடங்கிய படங்கள் பார்வையிடுவதற்கு ஏதுவாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவர் திரு. பிச்சாண்டி அவர்கள் கலந்து கொண்டு ஆயிரம் கால் மண்டபத்தினை திறந்து வைத்தார்.

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு பா. முருகேஷ் அவர்கள், மாவட்ட கண்காணிப்பாளர் மரு. கி. கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு. பிரியதர்ஷினி, உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி. ரஷ்மி ராணி, அருணாசலேஸ்வரர் திருக்கோயில் இணை ஆணையர்/ செயல் அலுவலர் திரு. அசோக்குமார், மாநில தடகள சங்கதுணைத்தலைவர் திரு. கம்பன், மணிலா கைப்பந்து சங்க துணைத்தலைவர் திரு. இரா. ஸ்ரீதரன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் திருமதி. மந்தாகினி , திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் திரு. முருகேசன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.