6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணி வகுக்கும் வானியல் நிகழ்வை இன்று முதல் 4 நாட்கள் கண்டு ரசிக்க, சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சனி, வியாழன், வெள்ளி, செவ்வாய் கோள்களை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை காணலாம். யுரேனஸ், நெப்டியூனை வெறும் கண்களால் பார்க்க முடியாது.