திருவண்ணாமலையில் பங்கேற்பு தேர்தலுக்கான விழிப்புணர்வு மிதிவண்டி ஊர்வலம்!

இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ சார்பில்‌ நேற்று (09.11.2022) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக வளாகத்தில்‌ பங்கேற்பு தேர்தலுக்கான விழிப்புணர்வு மிதிவண்டி ஊர்வலத்தினை மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ மற்றும்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.பா.முருகேஷ்‌ அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ மரு.மு. பிரியதர்ஷினி, திட்ட இயக்குநர்‌ மகளிர்‌ திட்டம்‌ திரு. சையித்‌ சுலைமான்‌, மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர் திரு.குமரன்‌ (தேர்தல்‌), திருவன்ணாமலை வருவாய்‌ கோட்டாட்சியர்‌ திருமதி.அர்.மந்தாகினி மற்றும்‌ துறை அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.