திருவண்ணாமலையில் பிப்-14 முதல் பிப்-24 ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா!

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை (பிப்.14) முதல் பிப்ரவரி 24-ஆம் தேதி வரை, புத்தகத் திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் புத்தகக் கண்காட்சி அரங்குகளில் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது.