திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று (06.01.2023) உத்திராயண புண்ணிய கால பிரம்மோற்சவம் தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இன்று கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடைபெறும் இந்த உத்தராயண புண்ணிய காலபிரம்மோற்சவ விழாவில் தினமும் காலை மாலை என இருவேலைகளிலும் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.