சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு..!!

நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின் கீழ் படித்து 12ம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவ,மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று (மே 12) வெளியானது.

கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 வரை 6,759 தேர்வு மையங்களில் நடந்த சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகளை 16.9 லட்சம் மாணவ,மாணவிகள் எழுதியிருந்தனர். இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

மாணவ,மாணவிகள் தங்களது தேர்வு முடிவுகளை cbse.nic.in அல்லது cbse.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

வெளியான முடிவுகள் அடிப்படையில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வில் 87.33 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 84.67 சதவீதம் பேர், மாணவிகள் 90.68 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 1.06 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.