நாளை வெளியாகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!

திட்டமிட்டபடி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது . அதன்படி, பொதுத்தேர்வு முடிவுகளை http://www.dge.tn.gov.in இணையதளத்தில் நாளை காலை 10 மணிக்குத் தெரிந்துகொள்ளலாம்.

தேர்வு முடிவுகள் வெளியான ஓரிரு நாட்களிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பள்ளிகள் வாயிலாகப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

2021-22-ஆம் கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வைத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வின் விடைத்தாள்களைத் திருத்தும் பணி கடந்த 1-ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி நிறைவுபெற்றது.