திருவண்ணாமலை மாவட்டத்தில் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என பொதுமக்களுக்கு ஆட்சியர் திரு.பா.முருகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லாத பொருட்களை எரித்து பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப் பண்டிகையை கொண்டாடி வந்தனர். ஆனால் தற்போது போகிப் பண்டிகையின்போது பழைய பிளாஸ்டிக், டயர்கள், ரசாயன கலந்த பொருட்கள் எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவது மட்டுமின்றி நச்சுப் புகையால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே போகிப் பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், அனைவருக்கும்
பொங்கல் வாழ்த்துக்கள் , சுற்றுச்சூழலை பாதுகாக்க புகையில்லா போகி கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளார்.