கடலூர் – சித்தூர் சாலை ஓரத்தில் அரசு முதன்மைச் செயலாளர் திரு. பிரதீப் யாதவ் அவர்கள் மரக்கன்று நட்டார்!

திருவண்ணாமலை மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் கடலூர் – சித்தூர் சாலை ஓரத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு. பிரதீப் யாதவ் அவர்கள் மரக்கன்று நட்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு பா. முருகேஷ் அவர்கள், மாவட்ட கண்காணிப்பாளர் மரு. கி. கார்த்திகேயன், தலைமை பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை திரு. ஆர். சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் திரு பழனிவேல், திட்ட இயக்குனர் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திரு. ந. வரதராஜன், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி. ரஷ்மி ராணி மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.