தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூன் 14ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது
- கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது
- ஜூன் 7 முதல் 14 வரையிலான ஊரடங்கு காலத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி!
- மின் பணியாளர் (Electricians) பிளம்பர்கள் (Plumbers) கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்!