கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை மூடப்பட்டு, பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், ஆடிப்பூர திருவிழாவின் நிறைவு நாளான இன்றும், நாளையும் 2 நாட்கள் பக்தர்கள் அதிகளவில் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 2 நாட்களுக்கு கோவில் நடை சாத்தப்படுவதாக, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. மேலும், ஆடிப்பூரத்தையொட்டி தீமிதி விழா நடைபெறாது என்று அறிவித்துள்ள மாவட்ட நிர்வாகம், கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளது.