மரபின் மைந்தன் முத்தையாவுக்கு தருமை ஆதீனப் புலவர் விருது!

சைவத்திருமடங்களில் முதன்மை திருமடமாக விளங்கும் தருமபுர ஆதீனம் இயல் தமிழ், இசை தமிழ் மற்றும் நாடகத் தமிழ் வல்லுனர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது.

இந்நிலையில் மயிலாடுதுறை குமார கட்டளை முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவின்போது தருமபுர ஆதீனம் 27- ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மரபின் மைந்தன் முத்தையாவுக்கு தருமை ஆதீனப் புலவர் என்ற விருதும் தங்கப் பதக்கமும் வழங்கி ஆசீர்வதித்தார்.

இவ்விழாவில் மதுரை ஆதீனம் வேளாக்குறிச்சி ஆதீனம், சூரியனார் கோவில் ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம் இளவரசு சுவாமிகள், திருவாவடுதுறை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.