பொங்கல் பரிசுத்தொகுப்பு: தமிழகம் முழுவதும் நாளை முதல் டோக்கன்கள் விநியோகம்..!!

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று (03.01.2023) முதல் வீடு, வீடாக விநியோகம் செய்யப்பட உள்ளது.

பொங்கல் பண்டிகைக்கான ரூ,1000, கரும்பு, பச்சரிசி மற்றும் சர்க்கரை பெற ஸ்மார்ட் கார்டுடன் கைரேகை பதிவு செய்யப்பட உள்ளது. இவை பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ரொக்கம் வழங்குவதில் முறைகேடு நடைபெறாமல் தடுப்பதற்காக இவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்களை வீடு வீடாக இன்று (03.01.2023) முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது.

டோக்கனில் பொங்கல் பரிசு வழங்கப்படும் தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்று இருக்கும். ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அதேநாளில் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளனர்.