திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  நடப்பாண்டிற்கான பாட புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் (12.06.2023) இன்று குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவது குறித்த உறுதிமொழியினையும், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவிகளுக்கு 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான பாட புத்தகங்களை வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாட புத்தகங்களை வழங்கினார். மேலும் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவருடைய கையொப்பம் இட்ட புத்தகத்தை பரிசாக வழங்கி கௌரவித்தார்.