திருவண்ணாமலையில் மாபெரும் புத்தக திருவிழா காந்தி நகர், பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் நாளை முதல் 19.04.2023 வரை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றுவருகிறது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ், அவர்கள் இன்று ( 08.04.2023) நேரில் சென்று ஆய்வு செய்தார்.
