பிறப்பு பதிவேட்டில் பெயர் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவிப்பு!

பிறப்பு சான்றிதழ் மற்றும் பிறப்பு பதிவேடுகளில் குழந்தைகளின் பெயர் விடுபட்டிருந்தால் தற்போது பதிவு செய்து கொள்ளலாம். தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகள் 2000ன் படி குழந்தையின் பெயர் விடுபட்டுள்ள அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தையின் பெயர் பதிவு செய்திட 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் கிராம ஊராட்சி அலுவலகங்களில் உள்ள பிறப்பு பதிவேடுகளில் விடுபட்டுள்ள குழந்தையின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் திரு. முருகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார்.