- திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள சண்முகா தொழிற் சாலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உண்டு உறைவிட வசதியோடு பிளஸ்-2 படித்து வரும் 30 மாணவ, மாணவிகளுக்கு இணைய வழி வகுப்பு மற்றும்தேர்வு பயன்பாட்டுக்காக கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
- இதில் மாவட்ட ஆட்சியர் திரு பா.முருகேஷ் அவர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கையடக்க கணினியை வழங்கினார். தொடர்ந்து அவர் மாதிரி பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் நுழைவுதேர்வுக்கு எவ்வாறு தயாராக வேண்டும். அதற்கான வழிமுறைகளையும் தெளிவாக விளக்கி கூறினார்.
- மாதிரி பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து தேவைகளையும், தங்கும் வசதி, கழிப்பிட வசதி, உணவுகளின் தரம் பற்றியும் மாணவ, மாணவிகளிடம் நேரடியாக கேட்டறிந்தார்.
- எந்த தேவைகள் இருந்தாலும் கேளுங்கள் தேவைகள் அனைத்தும் உடனடியாக செய்து தரப்படும் என்று கலெக்டர் மாணவர்களிடம்கூறினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் காளிதாஸ், தலைமை ஆசிரியர் ராமதாஸ், ஒருங்கிணைப்பாளர் பிரசன்னா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.