டாக்டர்.தனஜெயன்,  கர்நாடக ஆளுநர் தாவர் தாவர்சந்த் கெலாட் உடன் சந்திப்பு : Physiocon 2023 தொடங்கி வைக்க அழைப்பு

மங்களூருவில் உள்ள TMA பை சர்வதேச மாநாட்டு மையத்தில் செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெறும் PHYSIOCON 2023 மாநாட்டை மாண்புமிகு கர்நாடக ஆளுநர் தாவர் தாவர்சந்த் கெலாட் தொடங்கி வைக்க உள்ளார் .

மாநாட்டில் கலந்து கொள்வதற்கான முறையான அழைப்பை ஏற்பாட்டுக் குழு தலைவர் பேராசிரியர் யு.டி. இப்திகர் அலி உடன் பெங்களூரு பிசியோதெரபிஸ்ட் நெட்வொர்க்கின் செயலரும், பெங்களூருவில் 10 கிளைகள் கொண்ட ஸ்பெக்ட்ரம் பிசியோ என்ற முன்னணி பிசியோதெரபி நிறுவனத்தை நடத்திவரும் நமது கலசப்பாக்கத்தை சேர்ந்த டாக்டர்.தனஜெயன் சமீபத்தில் கவர்னர் கெலாட்டை சந்தித்து வழங்கினார்.

இதில் இந்திய பிசியோதெரபிஸ்ட் சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர். ஏ. சுரேஷ் பாபு ரெட்டி, ஆர்.ஜி.யு.எச்.எஸ்., செனட் உறுப்பினர் பேராசிரியர் சாய் குமார், பத்மஸ்ரீ இன்ஸ்டிடியூட் ஆப் பிசியோதெரபியின் முதல்வர் டாக்டர். பிரவின் ஆரோன் ஆகியோர் கலந்து கொண்டனர்!