- பால், தினசரி பத்திரிகை விநியோகம், தனியார் விரைவு தபால் சேவை, மருத்துவமனைகள் உள்பட மருத்துவத் துறை சார்ந்த பணிகள் அனைத்தும் அனுமதிக்கப்படுகிறது.
- முழுஊரடங்கு அமலில் உள்ள நாள்களில், உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை, மதியம் 12 மணி முதல் 3 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவூ 9 மணி வரையில் பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. ஸ்விக்கி, சொமோட்டா போன்ற மின் வணிக உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
- அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.
- முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைக்கள் முழுவதுமாக மூடப்படுகிறது.
- காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.
- ரேசன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும்.
- மத்திய அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடர்கிறது.
- வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- 3000 சதுர அடிக்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், வணிக வளாகங்களில் இயங்கும், பலசரக்கு, காய்கறி கடைகளுக்கும் தடை தொடர்கிறது.
- தனியாககாய்கறி, மீன், இறைச்சி, மளிகை, பலசரக்கு கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
- தேநீர் கடைகள் பார்சல் சேவையுடன் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- உள் மற்றும் திறந்த வெளி அரங்குகள், சமுதாயம், அரசியல், கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- இறப்புசார்ந்த நிகழ்வுகளில், இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.
- பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை.
- மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் அழகு நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள் இயங்க முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
- திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், மதுக் கூடங்கள், பொருள்காட்சி மற்றும் கேளிக்கை பூங்காக்கள் என எல்லாவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கனி கடைகள் செயல்பட தடை தொடர்கிறது.
- அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குட்முழுக்கு மற்றும் கோயில் திருவிழாக்களுக்கு அனுமதி இல்லை.
- நீலகிரி, கொடைக்காணல், ஏற்பாடு போன்ற அனைத்து சுற்றுலாத் தளங்களிலும் பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மாநிலத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை. பூங்காக்கள், அருங்காட்சியம் என அனைத்தும் மூடப்படுகிறது.
- மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான தனியார், அரசு போக்குவரத்து, வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணம், முக்கிய உறவினர்களின் இறப்பு, நேர்முகத் தேர்வு, வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கும், மருத்துவமனை செல்வதற்கும் உரிய ஆவணங்களுடன் பயணிப்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
- முழு ஊரடங்கின் போது, உணவு விநியோகம், மளிகை பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்யும் மின் வணிக நிறுவனங்கள் தவிர, அனைத்து மின் வணிக நிறுவனங்களின் சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து செயல்படும்.
- வங்கிகள், தனியார் பணம் வழங்கும் மையங்கள், வங்கி சார்ந்த போக்குவரத்து, காப்பீடு நிறுவன சேவைகள் அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.