விவசாயிகள் பயிரினை காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த பயிர்களை காப்பீடு செய்ய, நவம்பர் 15ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற பொது சேவை மையங்களில் உடனடியாக சென்று, உங்கள் பயிர்களை காப்பீடு செய்து கொள்ளுங்கள்.