இந்திய ரயில்வே துறையின் பாரத் கவுரவ் திட்டத்தின் முதல் தனியார் ரயில் தமிழகத்தின் கோவையிலிருந்து தனது முதல் சேவையை இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. இந்த சிறப்பு ரயில் கோவையிலிருந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி வரை செல்கிறது. இது முழுக்க முழுக்க தனியார் சார்பில் இயக்கப்படும் சேவை ஆகும்.
கோவையிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, எலகங்கா, தர்மாவரம், மந்த்ராலயம், வாடி வழியாக, ஷீரடியை சென்றடையும்.
டிக்கெட்டுக்கள் கிடைக்கும் இடம் : கோவை, சேலம்,ஈரோடு, திருப்பூர் அனைத்து சாய்பாபா கோவில்களிலும் கிடைக்கும்.