குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களை அதிகரிக்க TNPSC திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்.2வது வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளது. குரூப் 4 தேர்வு காலிப் பணியிடங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வலுத்ததால், TNPSC இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கடந்த ஜூன் மாதம் நடந்த தேர்வுக்கு கூடுதல் பணியிடம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
