உலக மரபு வார விழாவினை முன்னிட்டு தமிழக தொல்லியல் துறை, திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் இணைந்து பல்வேறு தொல்லியல் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 23.11.2022 அன்று காலை கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு அருகிலுள்ள காப்பலூர் கோயில் பற்றிய வரலாறு, சிற்பம், கல்வெட்டு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தொல்லியல் அலுவலர் ஜெ. ரஞ்சித், கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த சிற்றிங்கூர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை நடத்தினர்.