தீபாவளி பண்டிகைக்கு ரேசன் கடையில் பருப்பு, பாமாயில் இலவசமாக வழங்க அரசு ஆலோசனை!

ரேசன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ. 30-க்கும், பாமாயில் பாக்கெட் ரூ. 25 -க்கும், சர்க்கரை ஒரு கிலோ ரூ. 25-க்கும் விற்கப்பட்டு வருகிறது.

தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், அரிசி மற்றும் கோதுமையை இந்திய உணவுக் கழகத்திடம் இருந்தும், மற்ற பொருட்களை தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் கொள்முதல் செய்து, ரேசன் கடைகளுக்கு வினியோகம் செய்கிறது. தற்போது மத்திய அரசு, வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்துள்ளது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையின்போது ரேசனில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றையும் இலவசமாக வழங்கலாமா? என்று தமிழக பரிசீலித்து வருகிறது. இதற்காக நுகர்பொருள் வாணிப கழகம், அடுத்த 3 மாதங்களுக்கு தேவைப்படும் 60,000 டன் துவரம் பருப்பு, ஒரு லிட்டர் பாக்கெட் கொள்ளளவில் 6 கோடி லிட்டர் பாமாயில் ஆகியவற்றை கொள்முதல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.