திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டுறங்கில் நேற்று உயர்கல்வி வழிகாட்டி முகாம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டுறங்கில் நேற்று (20.10.2022) பள்ளி கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளிகல்வி சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2021- 22 ஆம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி தொடராத மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா. முருகேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு .து. கணேஷ்மூர்த்தி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு. தங்கமணி, உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் திரு. தனகீர்த்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு. சிலம்பரசன், தாட்கோ மேலாளர் திரு. ஏழுமலை மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.