பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித் தொகை : அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளை

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் ஜவ்வாது மலை ஒன்றியத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளை உயர் கல்வி உதவித் தொகை வழங்குகிறது.

மாணவர்கள் http://uhetrustindia.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியின் சான்றொப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்கள் இணைக்கப்பட வேண்டும்.

இந்த விண்ணப்பங்களை கல்லூரியில் சேர்ந்த ஒரு வாரத்துக்குள், ‘திட்ட ஒருங்கிணைப்பாளர், அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளை, அறை எண்: 215, டாக்டர் எம்.ஜி.ஆர் ப்ளாக், விஐடி வளாகம், வேலூர்-14’ என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

உதவித் தொகைக்கான தேர்வில் மாணவர்களின் குடும்ப பொருளாதார நிலை நேரில் சரிபார்க்கப்பட்டு, அவர்கள் உதவித் தொகைக்கு தேர்வு செய்யப்படுவர்.