தை அமாவாசை தர்ப்பணம் கொடுப்பது எப்படி?

ஒருவன் தன் பெற்றோர், குல தெய்வம், முன்னோரை வணங்காவிட்டால் வேறு எந்த ஒரு தெய்வத்தையும் வணங்கி பலனில்லை என்று சொல்கிறது சாஸ்திரம். எனவே, தை அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதுன் மூலம் முன்னோர்களின் ஆசியைப் பெறலாம்.

தர்ப்பணம் என்பது மறைந்த முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் இரைத்துச் செய்யும் வழிபாடாகும். ஒவ்வொரு அமாவாசை அன்றும் இதை செய்யலாம். தர்ப்பணம் செய்த பின்பு வீட்டில் தலைவாழை இலை போட்டு உணவு படைத்து, அன்னதானம் வழங்கி பிறகு சாப்பிட்டால் புண்ணியம். ஓராண்டில் 96 முறை தர்ப்பணம் கொடுக்கலாம் என்று சாஸ்திரம் சொன்னாலும், ஆடி அமாவாசை, மகாளயம் அமாவாசை, தை அமாவாசை மிகவும் விசேஷமானது. இன்றைய நாளில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தனம் என இரண்டையும் செய்யலாம்.