திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் எதிர்வரும் 30.10.2020 மற்றும் 31.10.2020 ஆகிய நாட்களில் பௌர்ணமி வரவிருப்பதாலும் 30.10.2020 அன்னாபிஷேகம் நடைபெறுவதாலும், அன்று பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையில் நடைசாற்றப்பட்டு, மீண்டும் மாலை 6.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.