திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கப்பட்டு வருவதை திரு. பிரதீப் யாதவ் அவர்கள் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலை புறவழிச் சாலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கப்பட்டு வருவதை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு. பிரதீப் யாதவ் அவர்கள் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு பா. முருகேஷ் அவர்கள், மாவட்ட கண்காணிப்பாளர் மரு. கி. கார்த்திகேயன், தலைமை பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை திரு. ஆர். சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் திரு பழனிவேல், திட்ட இயக்குனர் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திரு. ந. வரதராஜன், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி. ரஷ்மி ராணி மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.