திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை 03.06. 2022 முதல் 13.06.2022 வரை ஜமாபந்தி நடைபெறுகிறது . பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளிக்கலாம்.
ஜமாபந்தி, ஆண்டு தோறும் ஜூன் மாதத்தில் வருவாய்த் துறையினரால் கிராமந்தோறும் நடத்தப்படும் கிராம கணக்குகள் குறித்த தணிக்கை முறையாகும்.
கிராம கணக்குகள், தமிழ்நாடு அரசின் வருவாய் துறையின் கீழ் உள்ள வருவாய் கிராமங்கள் தொடர்பான 24 வகையான கிராமக் கணக்குகளைப் பராமரிப்பது கிராம நிர்வாக அலுவலர் ஆவார்.
வருவாய் தீர்வாயத்தின் போது கூடுதலாக கிராம மக்கள் தாங்களுக்கு சொந்தமான வேளாண் நிலத்தின் உடமைப் பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தான விவரங்கள் கேட்டு மனுக்கள் தரலாம்.
மேலும்,
- தங்கள் கிராமத்தில் உள்ள குறைகளை நீக்க முறையிடலாம்.
- கல்வி, குடிநீர், நீர் பாசன வாய்க்கால், மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி
- சொந்த வீட்டு மனை இல்லாதவர்கள் இலவச மனை பட்டா
- வீட்டு மனை மட்டும் உடையவர்கள் வீடு கட்ட கடன் மற்றும் மானியம்
- கிராம மக்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஒய்வூதியம், இலவச அரசு காப்புறுதி அட்டை, வறட்சி நிவாரண நிதி கோருதல், நிலப் பட்டா மாற்றம், நிலப்பட்டா சர்வே எண்கள் மாற்றங்கள் முதலிய தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம்.