திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இஆப., அவர்கள் தலைமையில் நேற்று (27.03.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் திட்டம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
