சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 – ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதுமுதல் ஐயப்ப பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்துள்ளது. வழக்கமாக டிசம்பர் மாதத்தின் பாதிக்கும் மேல் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம், இந்த ஆண்டு பூஜைக்காலத்தின் துவக்கத்திலேயே அதிகரித்து வருகிறது. சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.