திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா – 2022 முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை உயர் அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ், அவர்கள் தலைமையில் நேற்று (04.11.2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு, கி.கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு.பிரியதர்ஷினி, செய்யார் சார் ஆட்சியர் செல்வி. ஆர்.அனாமிகா, மாவட்ட வன அலுவலர் திரு. அருண்லால், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு. வீ.வெற்றிவேல், “திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலர் திரு. அசோக்குமார், வகுவாய் கோட்டாட்சியர்கள் திருமதி. அரி. மந்தாகினி (திருவண்ணாமலை), திருமதி. மா. தனலட்சுமி (ஆரணி), துறை அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.