திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி விழா அக்.15 முதல் தொடக்கம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி விழா அக்டோபர் 15-ம் தேதி தொடங்கி அக்டோபர் 23-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும். நவராத்திரி முதல் நாளான அக்டோபர் 15-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பராசக்தி அம்மன் சிறப்பு அலங்கார ரூபத்தில் எழுந்தருளி ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வாண வேடிக்கைகளுடன் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர் .

அக்டோபர் 16-ந் தேதி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், அக்டோபர் 17-ந் தேதி கெஜலட்சுமி அலங்காரத்திலும், அக்டோபர் 18-ந் தேதி மனோன்மணி அலங்காரத்திலும், அக்டோபர் 19-ந் தேதி ரிஷப வாகன அலங்காரத்திலும், அக்டோபர் 20-ந் தேதி ஆண்டாள் அலங்காரத்திலும், அக்டோபர் 21-ந் தேதி சரஸ்வதி அலங்காரத்திலும். அக்டோபர் 22-ந் தேதி லிங்க பூஜை அலங்காரத்திலும், அக்டோபர் 23-ந் தேதி திங்கட்கிழமை சரஸ்வதி பூஜை அன்று காலை பராசக்தி அம்மன் அபிஷேகமும், மாலையில் சந்தனகாப்பு அலங்காரமும் பின் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்திலும் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்வார்.